“அட்டகாசம் அன்லிமிடெட்”
“அட்டகாசம் அன்லிமிடெட்”
ஜெயா தொலைக்காட்சியில் வரும் ஞாயிறு புத்தன்டு தினத்தன்று பகல் 12:00 மணிக்கு ஒளிபரப்பாகும் சிறப்பு நிகழ்ச்சி “அட்டகாசம் அன்லிமிடெட்”.
நகைச்சுவை கலந்த ஒரு போட்டிக்கு போட்டி நிகழ்ச்சி… சின்னதிரை நகைச்சுவை நிகழ்ச்சிகளில் நன்கு அறியப்பட்ட நட்சத்திரங்கள் மற்றும் சின்னதிரை தொகுப்பாளினிகள் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தும் ஒரு மாறுபட்ட நிகழ்ச்சி. போட்டியாளர்கள் இரு குழுக்களாக பிரிந்து தங்கள் திறமையை வெளிபடுத்தினர். இந்நிகழ்ச்சியின் தொகுத்துக் வழங்குபவர் நன்கு அறியப்பட்ட பிரபல தொகுப்பாளர் திரு.கமல் அவர்கள் .
இந்த நிகழ்ச்சியை ஜெயா டிவி யோடு இணைந்து ஐரா நிறுவனத்தின் சார்பில் D.ராஜரத்தினம் தயாரித்து இயக்கிவருகிறார். மகிழ்ச்சியும், கலகலப்பும், நகைச்சுவையும் ஒன்றாய் இணைந்த இந்த பொழுதுபோக்கு நிகழ்ச்சி ஜெயா தொலைக்காட்சியில் புத்தாண்டு தினத்தன்று ஞாயிறு பகல் 12:00 மணிக்கும் அன்று ஒளிபரப்பாக உள்ளது.