தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை
சென்னை: தாழ்வான பகுதிகளை தவிர சென்னையில் வேறு எங்கும் தண்ணீர் தேங்கவில்லை என்று சென்னை மாநகராட்சி ஆணையர் பிரகாஷ் பேட்டியளித்துள்ளார். மக்கள் யாரும் அச்சமடையத் தேவையில்லை, நிலைமை கட்டுக்குள்தான் உள்ளது. நிவர் புயல் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் அனைத்தும் எடுக்கப்பட்டுள்ளது என தெரிவித்துள்ளார்.