வேலம்மாள் வித்யாலயாவில் ஆன்லைனில் சதுரங்க விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள்

 வேலம்மாள் வித்யாலயாவில் ஆன்லைனில் சதுரங்க விளையாட்டுப் பயிற்சி வகுப்புகள்

வேலம்மாள் வித்யாலயா, மாணவர்களின் சதுரங்க விளையாட்டுத் திறனை மேம்படுத்துவதற்காக ஆன்லைன் மூலம் நேரடி வகுப்புகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இப்பயிற்சி வகுப்புகள் வாரத்திற்கு இரண்டு முறை  நடத்தப்படும். மொத்தம் 24 வகுப்புகளை உள்ளடக்கியதாகும். சதுரங்க விளையாட்டில் ஈடுபாடுகொண்ட அனைவருக்கு இதில் பங்குபெறலாம்.

 இந்தியாவின் சிறந்த சதுரங்கப் பயிற்சியாளர்களான திரு.விஸ்வேஸ்வரன், திரு. தியாகராஜன், திரு. விஷ்ணு பிரஸனா மற்றும் திரு. கோபாலகிருஷ்ணன் ஆகியோர் பயிற்சி அளிக்க உள்ளனர்.
 இளம் வயதிலேயே, சதுரங்க விளையாட்டில் திறனை வளர்த்துக் கொள்ள, வேலம்மாள் வித்யாலயா மாணவர்களை உற்சாகப்படுத்தி ஊக்குவிக்கிறது. சதுரங்க விளையாட்டு வகுப்புகள் மே 30 முதல் தொடங்க இருக்கிறது. எதிர்கால சதுரங்க வீரர்கள் www.velamalnexus.comஇல் உள்நுழைந்து, பதிவு செய்து கொள்ளுங்கள்.

மாணவர்களே, வீட்டினுள் இருந்தபடியே இந்தியாவின் சிறந்த சதுரங்கப் பயிற்சியாளர்களுடன் விளையாடி, தங்களது திறனை மேலும் வளர்த்துக்கொள்ள இந்தச் சிறந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ளுங்கள்.