ரெய்னாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து மோதல் என தகவல்

ரெய்னாவுக்கும் அணி நிர்வாகத்திற்கும் இடையே கருத்து மோதல்  என தகவல்

பயிற்சிக்காக துபாய் சென்றுள்ள சென்னை அணியில் வீரர்கள் உட்பட 10க்கும் மேற்பட்டோருக்கு கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பது கண்டறியப்பட்டது. இதனால் பயிற்சியில் சிக்கல் ஏற்பட்டது. மற்றொரு இடியாக 2020 ஐபிஎல் தொடரிலிருந்து ரெய்னா வெளியேறினார். சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து வெளியேறிய அவர் நாடு திரும்பினார்.

இந்நிலையில் ரெய்னா அணியிலிருந்து வெளியேறியதால் அவரது 3வது இடத்தில் தோனி களமிறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் ரெய்னாவின் இடத்தில் தோனி 3வது இடத்தில் தோனி களமிறங்கி பேட்டிங் செய்ய வேண்டும் என கவுதம் காம்பீர் தெரிவித்துள்ளார். தோனி கடந்த ஒரு வருடமாக கிரிக்கெட்டை விட்டு வெளியே இருந்ததாகவும், எனவே தற்போது அவர் அதிக பந்துகளை எதிர்கொண்டு ஒரு சிறந்த ஆட்டத்தை வெளிப்படுத்த வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார். ஐபிஎல் தொடரில் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் முன்னாள் கேப்டனாக இருந்த கவுதம் காம்பீர் இரண்டு முறை கோப்பைகளை வென்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.