ஐநா மனித உரிமை ஆணையத்தின் 48 வது அமர்வு : செப்டம்பர் 13 அக்டோபர் 8 வரை . 

ஐநா மனித உரிமை ஆணையத்தின் 48 வது அமர்வு : செப்டம்பர் 13 அக்டோபர் 8 வரை . 

தலைப்பு : தமிழ் இனப்படுகொலைக்கான நீதி 

தயாரித்து பேசியவர் : ஜீவா டானிங் , ஐநா தொடர்பாளர் ,  நாம் தமிழர் கட்சி .

ஐ நா அவைத் தலைவர் அவர்களே , 

தர்பன் (Durban ) பிரகடனம் அடிப்படை உரிமைகள் பற்றி பேசுகிறது. தமிழ் ஈழத்தில் தமிழர்கள் துப்பாக்கி முனையில் வாழ்த்து வருகிறார்கள். கட்டமைக்கப்பட்ட இனப்படுகொலை தொடர்கிறது. 

இலங்கை  ராணுவம் 2009 போரின் போது 146000 க்கு அதிகமான தமிழர்களை இனப்படுகொலை  செய்தனர். பலரை இலங்கை ராணுவம் காணாமல் ஆக்க செய்தது. .  12 வருடங்கள் ஆகியும் காணாமல்  ஆக்கப்பட்ட தமிழர்களின் தாய்மார்கள் இன்று வரை அவர்களை தேடி வருகின்றனர் . இலங்கையின் உள்நாட்டு செயல்முறைக்கு பல தடவை தாய்மார்கள் புகார் அளித்து விட்டனர் . இதைக்குறித்து இதுவரை இலங்கை ராணுவம் மீது ஒரு சிறிய விசாரணை கூட நடத்தப்படவில்லை. பாதிக்கப்பட்டவர்களை  இலங்கை பாதுகாப்புப் படையினர் தொடர்ந்து மிரட்டி வருகின்றனர் . 

முல்லைத்தீவு மாவட்டத்தின் கேப்பாபுலவு பகுதியில் தமிழர்களின் நிலங்களை அபகரித்து இருக்கும் இலங்கை ராணுவம் நிலங்களை திரும்ப தர கோரிய  போராட்டம்  கடந்த 1600 நாட்களுக்கும் மேல்  தொடர்கிறது. 25 சதவீதத்திற்கும் அதிகமான இலங்கை ராணுவம் முல்லைத்தீவு மாவட்டத்தில் குவிக்க பட்டுள்ளது. இராணுவ ஆக்கிரமிப்பின் கீழ் உள்ள பெரிய நிலப்பகுதிகள்  தேசிய பாதுகாப்பு என்ற பெயரில் தங்கள் தங்கள் நிலங்களுக்குள் போக  உரிமைகள் மறுக்க படுகின்றன. 

அதிக அளவிலான  ராணுவ குவிப்பின் மூலம் தமிழர்களின் மனதில் பயத்தை உருவாக்குவது மட்டுமல்லாமல் , நிலங்கள் மற்றும் கடற்கரைகளில் நிராணுவத்தை குவிப்பதன் மூலம் தமிழர்களின் பொருளாதாரம் பெரிய அளவில் பாதித்துள்ளது. 

அவை தலைவர் அவர்களே, எங்களது கோரிக்கைகள் இதோ. 

1. இனப்படுகொலை செய்த இலங்கையை ஐநா மன்றம் உடனடியாக சர்வதேச குற்றவியல் நீதிமன்றத்தில் விசாரணை செய்ய ஆவண செய்ய வேண்டும். 

2. இலங்கையின் வடக்கு மற்றும் கிழக்கிற்கு ஐநா சிறப்பு அறிக்கையாளரை நியமிக்கவும். 

3. தமிழ் ஈழத்தை எந்த குறிப்பிட்ட நாடும் தற்போது ஆட்சி செய்யாத பகுதியாக அறிவிக்க வேண்டும்.  
நன்றி

 

ஐநா மனித உரிமை ஆணையத்தின் 48வது அமர்வு :செப்டம்பர் 13 முதல் அக்டோபர் 8 2021 வரை

தலைப்பு மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ச்சியாக நடைபெற்று வரும் கனிம வள கொள்ளை

தயாரித்து பேசியவர்: 
ஜீவா டானிங் , நாம் தமிழர் கட்சி ஐநா தொடர்பாளர். 

ஐநா அவைத் தலைவர் அவர்களே, 
யுனெஸ்கோவின் உலக பாரம்பரியக் குழு, இந்தியாவின் மேற்கு தொடர்ச்சி மலைகளை உலக பாரம்பரிய தளமாக அறிவித்துள்ளது . இது உலகின் உயிரியல் பன்முகத்தன்மையின் எட்டு அதிமுக்கியமான இடங்களில் ஒன்றாக அங்கீகரிக்கப்பட்டுள்ளது, தீபகற்ப இந்தியாவின் நீர் கோபுரம் என அழைக்கப்படும் மேற்கு தொடர்ச்சி மலை 325 க்கு மேற்பட்ட அழிந்து வரும்  அரிய உயிரினங்களின் தாயகமாக உள்ளது.  மேற்கு தொடர்ச்சி  மலை தான் தென் இந்திய மாநிலங்களில் பருவமழை பொழிவின் ஆதாரமாக விளங்குகிறது. 

இத்தகைய பெருமைகள் கொண்ட மேற்குத்தொடர்ச்சி மலை அழிவுத்  திட்டங்களால்  தொடர்ச்சியாக அழிக்கப்பட்டு  வருகிறது.  கடந்த 20 ஆண்டுகளில் மேற்கு தொடர்ச்சி மலை தொடர்ந்து ஆக்கிரமிக்கப்பட்டுள்ளது. காருண்யா பல்கலைக்கழகம் மற்றும் ஈஷா அறக்கட்டளை ஆக்கிரமிப்பின் முக்கிய எடுத்துக்காட்டுகள்.
தமிழ் நாட்டின்  கன்னியாகுமரி, தென்காசி மாவட்டங்களில், ஒரு நாளைக்கு குறைந்தது 30,000 டன் கனிம வளம் அனுமதிக்கப்பட்டதை விட மூன்று மடங்கு அதிகமாக வெட்டி எடுக்கப்பட்டு, மேற்குத் தொடர்ச்சி மலையில் இருந்து சட்டவிரோதமாக அண்டை மாநிலமான கேரளாவுக்கு காவல்துறைக்கு  லஞ்சம் கொடுத்து கொண்டு செல்லப்படுகின்றன.  கனிம வள கொள்ளையர்கள்  அதிகாரிகளுக்கு தவறான ஆவணங்களை வழங்கி, லஞ்சம் கொடுத்து கல் குவாரிக்கு ஒப்புதல் பெற்று வருகின்றனர்.
இதே நிலை தொடர்ந்தால், எதிர்காலத்தில் மேற்கு தொடர்ச்சி மலை முழுவதுமாக அழிந்து , நீர் நெருக்கடி, காலநிலை மாற்றம் அதிகரித்து இப்பகுதி  முழுவதும
 பாலைவனமாகும். 

அவைத்தலைவர் அவர்களே , இந்திய அரசும் , திமுக ஆளும் தமிழ் நாடு அரசும் கனிம வள கொள்ளையர்களுக்கு தொடர்ந்து துணை போகாமல் , மேற்குத் தொடர்ச்சி மலைகளின்  கனிம வள கொள்ளையை உடனடியாக தடுத்து , கஸ்தூரி ரங்கன் நிபுணர் குழுவின்   மேற்குத் தொடர்ச்சி மலை சூழலியல் பரிந்துரைகளை உடனடியாக செயல்படுத்துமாறு  கடுமையாக வலியுறுத்துகிறோம். நன்றி .