தமிழகத்தில் கொரோனா பாதிப்பைவிட குணமடைந்து செல்வோர் அதிகம்!
இன்று 52 பேருக்கு பாதிப்பு; 81 பேர் சிகிச்சை முடிந்து வீடு திரும்பினர்.தமிழகத்தில் இன்று 3 மாவட்டங்களில் மட்டுமே கொரோனா பாதிப்பு உறுதி செய்யப் பட்டுள்ளது.சென்னையில் தொடர்ந்து அதிகரித்து வரும் கொரோனா பாதிப்பு.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பில் முதல் 5 மாவட்டங்கள்.
சென்னை - 570
கோவை - 141
திருப்பூர் - 112
திண்டுக்கல் - 80
மதுரை - 79
தமிழகத்தில் சிகிச்சை பெற்றுவருபவர்களின் எண்ணிக்கை குறைந்தது.நேற்றைய நிலவரப்படி தமிழகத்தில் 838 பேர் கொரோனாவிற்கு சிகிச்சை பெற்று வந்த நிலையில் இன்று 809ஆக குறைந்தது.
இன்றைய கொரோனா பாதிப்பு - தமிழக நிலவரம்:
மொத்த பாதிப்பு - 1,937
இன்று உறுதியானவர்கள் - 52
குணமடைந்தவர்கள் - 1,101
உயிரிழப்பு - 24
சிகிச்சை பெறுபவர்கள் - 809
மொத்த பரிசோதனைகள் - 94,781
இன்றைய பரிசோதனைகள் - 7,176
தமிழகத்தில் அதிகளவாக சென்னையில் 47 பேருக்கு கொரோனா பாதிப்பு இன்று உறுதியானது.மதுரையில் 4 பேருக்கும், விழுப்புரத்தை சேர்ந்த ஒருவருக்கும் இன்று கொரோனா தொற்று.தமிழகத்தில் இதுவரை 1,101பேர் குணமடைந்துள்ளனர். தமிழகத்தில் இன்று கொரோனா பாதிப்பால் எந்த உயிரிழப்புகளும் ஏற்படவில்லை.இதுவரை பலியானவர்கள் எண்ணிக்கை 24ஆக உள்ளது.இதுவரை பாதிக்கப்பட்டோரின் எண்ணிக்கை 1,885ல் இருந்து 1,937ஆக உயர்வு.