"ஆயுர்வேதத்துடன் இணைந்த ஆரோக்கியமான வாழ்வு" குறித்த விழிப்புணர்வு நிகழ்வை வேலம்மாள் பள்ளி நடத்தியது.

 முகப்பேர் வளாகத்தில் உள்ள வேலம்மாள் முதன்மைப் பள்ளியில் 2022 மார்ச் 19 அன்று, ஸ்ரீ ஜெயேந்திர சரஸ்வதி ஆயுர்வேதக் கல்லூரியின் ஷாலாக்யதந்திரம் துறைப்பிரிவின் தலைவர் ,   

டாக்டர். பி.ஏ.சுதிர்,

சிறப்பு விருந்தினராகக் கலந்து கொண்டு ஆயுர்வேதம் பற்றி உரையாற்றினார், ஆயுர்வேதம் வாழ்க்கையின் அறிவு

என்றும் அறிவியல் மற்றும் ஆரோக்கியமான வாழ்க்கைக் கலையின் துல்லியமான கலவையாகும் என்றும்

பேசிய சிறப்பு விருந்தினர் ஆயுர்வேதத்தின் விரிவான இயற்கையான குணப்படுத்தும் வழிகள் மற்றும் நோய்களுக்கு சிகிச்சையளிப்பதற்கும், மனித உடல் மற்றும் மனதின் பொது ஆரோக்கியத்தை மேம்படுத்துவதற்கும் இம்மருத்துவ முறை பிரபலமானது என்றும் கூறினார்.

இந்நிகழ்வில் நடைபெற்ற கலந்துரையாடல் நிகழ்வு மிக முக்கிய சிறப்பம்சமாக இருந்தது, இதில் ஆசிரியர்கள் தங்கள் உடல்நலம் குறித்த சந்தேகங்களைத் தெளிவுபடுத்துவதற்கான வாய்ப்பைப் பெற்றனர்.

 பின்னர் வேல்ஸ் நாட்டியாலயா மாணவர்கள் நிகழ்வின் கருப்பொருளுக்கு ஆச்சர்யமூட்டும் அளவில் பொருத்தமான மைம் எனப்படும் சைகை காட்சிகள் மற்றும் நாட்டுப்புற நடனம் ஆகியவற்றைச் சித்தரித்துக் காட்டினர்.

இக்கலை நிகழ்வு இந்த அமர்வின் கலகலப்பான திருப்புமுனையாக அமைந்தது.எந்தவொரு நோய்க்கும் ஆயுர்வேதம் ஒரு முழுமையான சிகிச்சையாகும், ஏனெனில் இது நோய்களுக்கான அடிப்படைக் காரணங்களைப் புரிந்துகொண்டு ஆரோக்கியத்தை மீட்டெடுப்பதை நோக்கமாகக் கொண்டுள்ளது என்ற செய்தியுடன் சிறப்பு விருந்தினர்

அமர்வை இனிதே நிறைவு செய்தார்.