நாளை முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி
 
            நாளை முதல் திரையரங்குகள் 50 சதவீத இருக்கைகளுடன் இயங்க அனுமதி
அக்டோபர் 15 முதல் பாதி அரங்கு நிரம்ப படக்காட்சிகளைத் திரையிட மத்திய அரசு அனுமதியளித்துள்ளது.
இதையடுத்து கொல்கத்தாவில் உள்ள மல்டிபிளக்சில் திரையரங்குகள் சுத்தம் செய்யப்பட்டுள்ளன. ஏழு மாதங்களுக்குப் பிறகு பெரிய திரையில் படம் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் காத்திருக்கின்றனர்.
இதே போன்று உத்தரப்பிரதேச மாநிலம் அலிகர் உள்ளிட்ட சில நகரங்களிலும் திரையரங்குகள் நாளை முதல் திறக்கப்பட உள்ளதால் அங்கும் பல்வேறு முன்னேற்பாடுகள் செய்யப்பட்டு வருகின்றன.
 
 
                        



 
         
         
         
         
         
                         
                         
                         
                         
                         
         
         
         
         
        