உலகம் தரம் வாய்ந்த சிரக் தொழில்நுட்பம் இப்போது சென்னையில்

உலகம் தரம் வாய்ந்த சிரக் தொழில்நுட்பம் இப்போது சென்னையில்
உலகம் தரம் வாய்ந்த சிரக் தொழில்நுட்பம் இப்போது சென்னையில்

சென்னை, 19 பிப்ரவரி 2019: பல் பாதுகாப்பு தொடர்பான தயாரிப்பு மற்றும் தொழில்நுட்பத்தில் உலகிலேயே முன்னோடி நிறுவனமாக விளங்குவது டென்ட்ஸ்ப்ளே சிரோனா. இதேபோன்று சென்னையில் மிகச்சிறந்த பல் மருத்துவ சிகிச்சை மருந்தகமாகத் திகழ்வது பியர்ல்ஸ் டென்டிஸ்ட்ரி ஆகும். இந்த இரண்டும் இணைந்து பாதுகாப்பு தொடர்பான சிகிச்சையில் சிறப்பான, அதிகம் செலவு பிடிக்காத சிகிச்சை முறையை இன்று அறிமுகப்படுத்தியுள்ளது. அதாவது சிராக் என்ற தொழில்நுட்பத்தின் மூலமாக விரைவான பல் மருத்துவ சிகிச்சைக்கான வழிமுறைகள் அறிமுக்படுத்தப்பட்டு இருக்கிறது. இதனை இந்திய கல்வியியலாளரும், பகவான் சைபர் டெக் குழுமத்தின் முதன்மை செயல் அலுவலருமான திரு வி.எம்.முரளிதரன் என்ற மைக் முரளிதரன், சவேரா ஓட்டல்களின் இணை நிர்வாக இயக்குநர் நீனா ரெட்டி மற்றும் வி-எக்ஸெல் கல்வி அறக்கட்டளையின் இரண்டு பேரும் சிறப்பு விருந்தனர்களாக பங்கேற்று புதிய தொழில்நுட்பத்தைத் தொடங்கி வைத்தனர். இந்தப் புதிய தொழில்நுட்பத்தால் பல் பாதுகாப்பு தொடர்பான சிகிச்சைகளுக்கு ஒருமுறை மட்டுமே பல் பாதுகாப்பு மையத்துக்குச் சென்று உடனடியாக தீர்வு பெறலாம்.

செராமிக் மறுசீரமைப்பு என்ற சிராக் தொழில்நுட்பம் அதிநவீன தொழில்நுட்ப முறையாகும். இதன்மூலம், அதிநவீன டிஜிட்டல் தொழில்நுட்ப முறை வழியாக பற்கள் பாதுகாக்கப்படுகின்றன. இந்த முறையால் ஒருமுறை மட்டுமே பல் பாதுகாப்பு மையத்துக்குச் சென்று தீர்வு பெறலாம்.

இந்தப் புதிய தொழில்நுட்பம் குறித்து டென்ட்ஸ்ப்ளே சிரோனா வணிகப் பிரிவு தலைவர் (தெற்கு) பி.என்.குட்டி கூறியதாவது:

சிராக் தொழில்நுட்ப உற்பத்தியை நாங்கள் மட்டுமே மேற்கொள்கிறோம். 50 ஆயிரத்துக்கும் மேற்பட்ட சிராக் அமைப்புகளை ஏற்படுத்தியுள்ளோம். 7.5 மில்லியன் பேருக்கு பல் சீரமைப்புகளை இந்தத் தொழில்நுட்பத்தின் மூலமாக செய்யப்பட்டுள்ளன. வளர்ச்சிக்கான தொழில்நுட்ப அம்சங்களை இந்தியாவின் பிற நகரங்களைக் காட்டிலும் சென்னை நகரில் உள்ளவர்கள் உடனடியாக ஏற்றுக் கொண்டு பின்பற்றுவார்கள். இதற்கு முன்பு அதற்கான சான்றுகள் உள்ளன. சென்னையில் சிராக் தொழில்நுட்பம் குறித்த முன்னோட்டத்தை அறிமுகப்படுத்தினோம். அதற்கு நல்ல வரவேற்பு கிடைத்தது. இந்தப் புதிய தொழில்நுட்பம் தொடர்பாக 50-க்கும் மேற்பட்ட பல் மருத்துவர்களுடன் நாங்கள் பங்குதாரராக உள்ளோம். 2020-ஆம் ஆண்டுக்குள் நாங்கள் 200 சதவீதம் எங்களது தடத்தை அதிகரிக்க குறிக்கோள் வைத்துள்ளோம் என்றார்.

பியர்ல்ஸ் டென்டிஸ்ட்ரியைச் சேர்ந்த டாக்டர் பி.அருண்குமார் கூறியதாவது:-

பல் பாதுகாப்பு தொடர்பான சிகிச்சை முறையில் தொழில்நுட்பங்கள் வளர்ந்து கொண்டே வருகின்றன. தொழில்நுட்பத்தைப் பின்பற்றுவது என்பது நோயாளிகளின் வசதிகள், நேரம் மிச்சப்படுவது, சிகிச்சைக்கான கட்டணம் ஆகியவற்றைச் சார்ந்தே இருக்கின்றன. பல் மருத்துவ சிகிச்சைக்கு மேற்கத்திய நாடுகளே சிறந்தவை என்ற காலம் எல்லாம் மலையேறி விட்டன. இப்போது சிறப்பான பல் மருத்துவ சிகிச்சைக்காக இந்தியாவில் குறிப்பாக சென்னைக்கே உலகெங்கிலும் இருந்து மக்கள் வருகின்றன. ஒரு முறை மட்டுமே பல் பராமரிப்பு சிகிச்சை மையத்துக்குச் சென்று சிகிச்சை பெறக் கூடிய ஒருங்கிணைந்த பல் பராமரிப்பு சிகிச்சை முறையை அறிமுகப்படுத்துவதில் நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இதன்மூலம், உலகின் தலைசிறந்த பல் மருத்துவ சிகிச்சையை பெறுவதுடன், நோயாளிகளின் நேரமும் மிச்சமாகும் என்றார்.

வி-எக்ஸல் கல்வி அறக்கட்டளையின் பயிற்சியாளராக உள்ள டாக்டர் சந்தியா அருண்குமார் கூறியது:-

சென்னையில் மிகச்சிறந்த மருத்துவ சிகிச்சை முறை அறிமுகப்படுத்தப்படுவதில் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறோம். இது எங்களுக்கு மிகவும் முக்கியமான தருணமாகும். இந்த புதிய முறை சோதனை அடிப்படையில் செய்து பார்க்கப்பட்ட போது நோயாளிகளின் முகத்தில் வெளிப்பட்ட அளப்பரிய மகிழ்ச்சியை நாங்கள் கண்டோம். இது எங்களது இதயத்தில் மிகுந்த சந்தோஷத்தை ஏற்படுத்தியது. பியர்ல்ஸ் பல் பராமரிப்பு மையத்தின் நோக்க வரியான, புன்னகை தொடங்கட்டும் இங்கு இருந்து என்பதற்கு மேலும் உயிரோட்டம் அளிக்கும் வகையில் இந்த தொழில்நுட்பம் அமைந்திருக்கிறது என்றார்.

பல் பாதிப்பால் கடுமையாக அவதிப்படும் நோயாளிகளின் வசதி, அவர்களுக்குத் தேவைப்படும் சிகிச்சை முறை ஆகியவற்றைக் கருத்தில் கொண்டு சிராக் தெளிவான மருத்துவ சிகிச்சையை அளிக்கிறது. சிராமிக் பல் வரிசையை ஒரே முறை பல் மருத்துவ பராமரிப்புக்கு வந்து பொருத்திக் கொண்டு சென்று விடலாம். இதனால், அவர்களது நேரம் மிச்சமாகும். திரும்பவும் வர வேண்டுமோ என்ற அச்ச உணர்வுகளில் இருந்து அவர்கள் விடுபடலாம்.

டென்ட்ஸ்ப்ளே சிரோனா:

இந்த நிறுவனம் பல் பாதுகாப்பு தொடர்பான பொருள்கள் மற்றும் தொழில்நுட்பங்களை தயாரிப்பதில் முன்னணி பெற்று விளங்குகிறது. பல் மருத்துவ சிகிச்சைக்குத் தேவைப்படும் தொழில்நுட்பங்கள், சிறப்பான கருவிகள், பொருள்கள் ஆகியவற்றை உற்பத்தி செய்வதில் முன்னணியுடன் திகழ்கிறது.